

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வீரர் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வரும் மார்ச் மாதம் 5 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவி காயின் மகள் சானியா சாந்தோக் என்பவருடன் திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவ நிபுணராகப் பணிப்புரிந்து வரும் சானியாவுடன் அர்ஜுனுக்கு, கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாகவும், இருவரின் திருமண நிகழ்ச்சிகள் வரும் மார்ச் 3 ஆம் தேதி தொடங்குவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், மும்பையில் நடைபெறவுள்ள அர்ஜுன் மற்றும் சானியா திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு லக்னௌ அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.