

பிரதமர் நரேந்திர மோடி செல்போன் மூலம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் உரையாடியுள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து செயல்படும் என இருநாட்டு அரசுகளும் கூறி வரும் நிலையில் இந்த உரையாடல் இன்று (ஜன. 7) நடைபெற்றுள்ளது.
இதுபற்றி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
“என் நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் உரையாடி அவருக்கும் இஸ்ரேல் மக்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்ததில் மிகவும் மகிழ்ச்சி.
நிகழாண்டில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவுகளைப் பலப்படுத்தும் வழிகள் குறித்து நாங்கள் கலந்தாலோசித்தோம்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், பிரதமர் நரேந்திர மோடி உடனான இந்த உரையாடலில் காஸாவுக்கான அமைதித்திட்டம் குறித்து விளக்கியதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.