

அமெரிக்காவில் 140 கிலோ போதைப்பொருள் கடத்தியதாக 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் குர்பிரீத் சிங் மற்றும் ஜஸ்வீர் சிங் இருவரும் 7 மில்லியன் டாலர் மதிப்பிலான 140.16 கிலோ கொகைன் போதைப்பொருளைக் கடத்தியதாக அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கைது செய்தது.
கனரக லாரியின் உள்ளே மறைத்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த போதைப்பொருளில் சுமார் 1.2 கிராம் அளவே 1,13,000 பேரைக் கொல்லக்கூடியது என்றும் பாதுகாப்புத் துறை கூறினர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நாடுகடத்தல் கைதிகளாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இருப்பினும், லாரிக்குள் போதைப்பொருள் இருந்தது குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும், ஓர் உணவகத்துக்கு செல்லுமாறு நிறுவனம் தங்களை அறிவுறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்கள் இருவரும் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.