கொல்கத்தாவில் பாஜக தலைவர்களுடன் ஜெ.பி. நட்டா முக்கிய ஆலோசனை!

பாஜக தலைவர்களுடன் ஜெ.பி. நட்டா ஆலோசனை பற்றி..
ஜெ.பி. நட்டா
ஜெ.பி. நட்டா
Updated on
1 min read

மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி. நட்டா கொல்கத்தாவில் கட்சித் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

திரிணமுல் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் ஏற்பாடுகளை துரிதப்படுத்தவும், பல்வேறு கூட்டங்களில் பங்கேற்கவும் நட்டா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் வந்துள்ளார்.

முன்னதாக, கொல்கத்தா வந்தடைந்த ஜெ.பி. நட்டாவை, பாஜக எம்.எல்.ஏ மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வரவேற்றார்.

இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் தேசியத் தலைவரும், மத்திய சுகாதார அமைச்சருமான நட்டாவை வரவேற்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன். பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் வலிமையான, வளமான மேற்கு வங்கத்தை உருவாக்குவதில் அவரது வழிகாட்டுதலும் தொலைநோக்குப் பார்வையும் எங்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன இவ்வாறு அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தொண்டர்களிடமிருந்து கள நிலவரம் குறித்த கருத்துக்களைப் பெற்று, வரவிருக்கும் தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்தார்.

ஜனவரி 9-ஆம் தேதி, நட்டா தனது மத்திய அமைச்சகம் தொடர்பான அதிகாரப்பூர்வ கூட்டங்களில் கலந்துகொள்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

2026 சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு, பாஜக மேற்கு வங்கத்தில் தனது அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com