

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (ஜன. 11) கேரள மாநிலத்துக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் நடைபெறவுள்ள ஏராளமான நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை திருவனந்தபுரம் செல்வதாக, பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தின் உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக முதல்முறையாக மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தப் பயணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநகராட்சி உறுப்பினர்களை அமித் ஷா நேரில் சந்தித்து உரையாடுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் அமித் ஷா தரிசனம் நாளை காலை தரிசனம் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மதியம் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களை அமித் ஷா சந்திப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, திருவனந்தபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி விரைவில் வருகைத் தருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தப் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.