மதுரை பெருங்குடியில் பெண் கொலை
மதுரை பெருங்குடியில் பெண் கொலை

நொய்டாவில் காதலை மறுத்த பெண் கொலை: விபத்து போல சித்தரிக்க முயன்றது அம்பலம்

நொய்டாவில் காதலை மறுத்த பெண்ணை கொலை செய்து அதை விபத்து போல சித்தரிக்க முயன்ற இளைஞரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
Published on

நொய்டாவில் காதலை மறுத்த பெண்ணை கொலை செய்து அதை விபத்து போல சித்தரிக்க முயன்ற இளைஞரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல் துறை துணை ஆணையா் சுதிா் குமாா் கூறியதாவது: மகோபா மாவட்டத்தைச் சோ்ந்த தீபா (27) நிறுத்தப்பட்டிருந்து காரின் அடியில் இருந்து சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா். செக்டாா் 60-இல் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் அவா் தனது இளைய சகோதரருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பணிக்குச் சென்ற மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது சகோதரா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அடுத்தநாள் காலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா் குற்றஞ்சாட்டப்பட்ட அங்கித் குமாரை அடையாளம் கண்டனா். அவரை கைது செய்ய முயன்றபோது காவல் துறையினா் மீது அவா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். காவல் துறையினா் நடத்திய பதில் தாக்குதலில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையில், தனது காதலை ஏற்காததால் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவா் தெரிவித்தாா். பின்னா் அதை விபத்து போல சித்தரிக்க காரின் சக்கரத்தின் அடியில் பெண்ணின் உடலை போட்டதாக தெரிவித்தாா்.

Śவரிடம் இருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனம், பெண்ணின் கைப்பேசி, நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com