பாஜகவின் புதிய தேசிய தலைவர் யார்? ஜன. 20-ல் அறிவிப்பு

பாஜகவின் தேசிய தலைவருக்கான தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
பாஜக
பாஜகபிரதிப் படம்
Updated on
1 min read

பாஜகவின் தேசிய தலைவருக்கான தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் தேசிய தலைவராக தற்போது ஜெ.பி. நட்டா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் ஏற்கெனெவே முடிவடைந்து விட்டது. இருப்பினும், பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் காரணங்களால் ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, பாஜக தேசிய தலைவர் விவகாரத்தில் காங்கிரஸும் விமர்சனம் செய்தது.

இந்த நிலையில், பாஜக தேசிய தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற திங்கள்கிழமையில் (ஜன. 19) மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு மீதான பரிசீலனை 4 மணி முதல் 5 மணிவரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையில் (ஜன. 20) தேர்தல் நடத்தப்பட்டு, அன்றைய நாளிலேயே பாஜகவின் புதிய தேசிய தலைவர் யார் என்பது அறிவிக்கப்பட்டு விடும். இந்தத் தேர்தலை நடத்துவதற்காக கே. லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தற்போது பாஜகவின் தேசிய செயல் தலைவராக இருந்துவரும் நிதின் நபினே தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், இவருக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜெ.பி. நட்டாவும் தேசிய செயல் தலைவராக இருந்து, பின்னர் பாஜக தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாஜக
மகாராஷ்டிர தேர்தலில் அழியும் மை விவகாரம்.. தேர்தல் ஆணையம் மீது ராகுல் காட்டம்!
Summary

BJP to announce new party president on January 20, Nitin Nabin To Take Top Seat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com