

மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களின் மாநில தினத்தை முன்னிட்டு அந்தந்த மாநில மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது,
மணிப்பூர் மக்கள் தங்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வளம் சேர்ப்பதாகக் கூறிய அவர், வரும் காலங்களில் அந்த மாநிலம் வளர்ச்சியின் பாதையில் சீராக முன்னேறிச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அந்த மாநிலத்தின் விளையாட்டு மீதான ஆர்வம், செழுமையான கலாசார பாரம்பரிய மற்றும் இயற்கையுடனான நெருங்கிய பிணைப்பு ஆகியவை உண்மையிலேயே வியப்புக்குறியவை.
மேகாலயா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, அந்த மாநில மக்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வலுவான பங்களிப்பை வழங்கியுள்ளனர். மாநிலத்தின் கலாசார துடிப்பு மற்றும் இயற்கை அழகும் நாடு முழுவதும் பரவலாகப் பாராட்டப்படுவதாகும். எதிர்காலத்தில் மேகாலயா வளர்ச்சியில் புதிய உச்சங்களைத் தொடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திரிபுரா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், அந்த மாநிலத்தின் பயணம் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் குறிப்பிடத்தக்கக் கலவையால் குறிக்கப்படுகிறது.
மாநிலம் பல்வேறு துறைகளில் முன்னணி மாற்றங்களைக் கண்டுள்ளதுடன், திரிபுரா மக்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு உத்வேகம் அளிக்கின்றனர்.
இனிவரும் காலங்களில் திரிபுரா குறிப்பிடத்தக்க வகையில் செழித்து வளர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.