

சத்தீஸ்கரில் நக்சல்கள் புதைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பாதுகாப்புப் படையினர் 11 பேர் காயமடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ரேகுட்டா மலைகளின் வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நக்சல் புதைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையினர் 11 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்ரேகுட்டா, மாவோயிஸ்டுகளின் மறைவிடமாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் கர்ரேகுட்டா மலைகளைச் சுற்றியுள்ள அடர்ந்த காடுகளில் மத்திய மற்றும் மாநில பாதுகாப்புப் படையினர் 21 நாள்கள் விரிவான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது 31 நக்சல்கள் கொல்லப்பட்டனர். மேலும் 35 ஆயுதங்கள், 450 ஐஇடிகள், ஏராளமான டெட்டனேட்டர்கள், வெடிக்கும் சாதனங்கள் மற்றும் மருத்துவ பொருட்கள், மின்சார உபகரணங்கள், நக்சல் இலக்கியங்கள் உள்ளிட்ட பிற பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.