

வாரத்தில் 5 நாள்கள் வேலை என்ற முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை(ஜன. 27) நாடெங்கிலும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சேவைக் குறைபாடு ஏற்படக்கூடாது என குடியரசு நாளில் (ஜன. 26) தில்லியில் நடைபெற்ற நிதித்துறைச் செயலர் தலைமையிலான அவரச ஆலோசனைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்பிஐ தலைவர், பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைமைச் செயலதிகாரிகள், இந்திய வங்கிகளின் சங்கத்தின் செயலர் ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், வழக்கமான வங்கி சேவைகளான வாடிக்கையாளர் சேவை, டிஜிட்டல் சேவை, வணிக சேவை, இணையதள வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை உள்பட அனைத்து முக்கிய சேவைகளும் தடையின்றி செயல்பட பொதுத்துறை வங்கி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.