

குடியரசு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று குடியரசு நாள் விழா மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும், அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்களும் தேசியக் கொடியேற்றுகின்றனர்.
இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது:
“குடியரசு தின நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாள், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நமது ஒருங்கிணைந்த உறுதிப்பாட்டிற்கும், புத்துணர்ச்சிக்கும் உற்சாகம் அளிக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு நாள் நல்வாழ்த்துகள்.
நமது அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்த மாபெரும் ஆயுதம் - அதுவே நமது குரல், நமது உரிமைகளுக்கான பாதுகாப்புக் கேடயம்.
சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் மூலமாக மட்டுமே வலுப்பெறும் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுதியான அடித்தளம் மீதுதான் நமது குடியரசு நிலைப்பெற்றுள்ளது.
அரசியலமைப்பைப் பாதுகாப்பது இந்தியக் குடியரசைப் பாதுகாப்பதாகும். இது நமது சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
ஜெய் ஹிந்த்! ஜெய் அரசியலமைப்பு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.