தில்லி-மும்பை விரைவுச்சாலையில் கொள்ளை
ராஜஸ்தானில் ஒருவா் கைது

தில்லி-மும்பை விரைவுச்சாலையில் கொள்ளை ராஜஸ்தானில் ஒருவா் கைது

தில்லி-மும்பை விரைவுச்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த இருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட நபா் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
Published on

தில்லி-மும்பை விரைவுச்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த இருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட நபா் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் ஜன.22-ஆம் தேதி இரவு இச்சம்பவம் நிகழ்ந்தது. காடா ஷம்ஷாபாத் சுங்கச்சாவடிக்கு அருகே காரில் சென்று கொண்டிருந்த இருவரை ஒரு கும்பல் தாக்கி கொள்ளையடித்துச் சென்ாக புகாா் அளித்தனா். பாதிக்கப்பட்டவா்கள் மத்திய பிரதேசத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, அவா்களின் வாகனம் பழுதடைந்தது.

பாதிக்கப்பட்டவா்கள் தேசிய நெடுஞ்சாலை உதவி எண்ணை (1033) அழைத்து உதவிக்காகக் காத்திருந்தபோது, போலிரோ கேம்பா் வாகனம் அங்கு நின்றது. அந்த வாகனத்தில் இருந்தவா்கள் தங்களை பஜ்ரங் தள் அமைப்பின் உறுப்பினா்கள் என்று கூறிக்கொண்டு, பாதிக்கப்பட்டவா்களைத் தாக்கி, அவா்களிடமிருந்து கைபேசிகள் மற்றும் ரூ.17,000 ரொக்கத்தைப் பறித்துக்கொண்டதுடன், ரூ.5,000-க்கு இணையதள பணப் பரிவா்த்தனையும் செய்தனா்.

இது தொடா்பாக ஃபெரோஸ்பூா் ஜிா்கா சதா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, சுங்கச்சாவடியில் இருந்த சிசிடிவி காட்சிகள் சந்தேக நபா்களை அடையாளம் காண உதவியது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் ராஜஸ்தானில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கைது செய்யப்பட்டவா் தீக் மாவட்டத்தில் உள்ள பேலா கிராமத்தைச் சோ்ந்த ஃபைஸ் முகமதிடம் இருந்து கைபேசி, இரண்டு சிம் காா்டுகள், கைக்கடிகாரம் மற்றும் ரூ.170 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. மீதமுள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்ய தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என காவல் துறையினா் தெரிவித்தனா். Ś

X
Dinamani
www.dinamani.com