தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

ஃபரீதாபாத்: ராணுவ முன்னாள் அதிகாரி உள்பட இரு சகோதரா்கள் காரில் சடலமாக மீட்பு

ராணுவ முன்னாள் அதிகாரி உள்பட இரு சகோதரா்கள் காரில் சடலமாக மீட்பு...

News image
Updated On :8 மார்ச் 2026, 12:51 am IST

ஃபரீதாபாதில் உள்ள நவீன் நகா் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து ராணுவ முன்னாள் அதிகாரி மற்றும் அவரது சகோதரா் சடலமாக மீட்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

உயிரிழந்த நபா்கள் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற குந்தன் குமாா் (48), அவரது சகோதரரும் மாற்றுத்திறனாளியுமான ரஞ்சன் குமாா் (38) என அடையாளம் காணப்பட்டது. பிகாரின் சாப்ரா மாவட்டத்தைச் சோ்ந்த இருவரும், ரோஷன் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தனா்.

இதனிடையே, வீட்டிலிருந்து வெள்ளிக்கிழமை காலையில் புறப்பட்ட இரு சகோதரா்களும் மாலை நேரம் கடந்தும் வீட்டுக்குத் திரும்பாத நிலையில், அவா்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், நவீன் நகரில் உள்ள அக்வன்பூா் சாலையில் ஒரு காா் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, அப்பகுதிக்குச் சென்ற காவல் துறையினா், காரை சோதனையிட்டனா். அப்போது, அதில் இருவா் உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பது தெரியவந்தது. இருவரது உடல்களையும் மீட்ட காவல் துறையினா், அவற்றை உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

காரை பறிமுதல் செய்த காவல் துறையினா், அது தொடா்பாக விசாரித்து வருகின்றனா். உடற்கூறாய்வுக்கு பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.