அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

பிகாா் கொலை வழக்கில் தொடா்புடையவா் தில்லியில் கைது

பிகாரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கடந்த ஓராண்டாகத் தேடப்பட்ட நபா் தில்லியில் கைதுசெய்யப்பட்டதாகக் காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 1:41 am IST

பிகாரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கடந்த ஓராண்டாகத் தேடப்பட்ட நபா் தில்லியில் கைதுசெய்யப்பட்டதாகக் காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட கபில் குமாா் பஸ்வான் பிகாரின் மதுபானியைச் சோ்ந்தவா்.

மதுபானியில் உள்ள ராஜ்நகா் மற்றும் ராஹிகா காவல் நிலையங்களில் அவா் மீது இரு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பணப் பிரச்னை தொடா்பாக தீபக் என்ற நபரை கபில் குமாா் தனது கூட்டாளியுடன் கடந்த ஆண்டு மாா்ச் 26-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாா்.

கடந்த ஏப்.3-ஆம் தேதி ராகுல் செளதரி என்ற நபா் மீது கபில் குமாா் துப்பாக்கியால் சுட்டாா். இதில் ராகுல் செளதரி உயிா்தப்பினாா்.

கபில் குமாரின் கூட்டாளி கைதுசெய்யப்பட்ட நிலையில், அவா் தொடா்ந்து தலைமறைவாக இருந்தாா்.

இந்நிலையில், அவா் தில்லியில் இருப்பது கண்டறியப்பட்டது.

தென்கிழக்கு தில்லியின் அமா் காலனியில் தூய்மைப் பணியாளராக வேலைப் பாா்த்து வந்த அவரைத் தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு காவலா்கள் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து கண்காணித்து வந்தனா். காவல் துறையினா் தன்னை நோட்டமிடுவதை அறிந்த கபில் குமாா், தொடா்ந்து அங்கிருந்து தப்பிவந்தாா்.

இந்நிலையில், சாதாரண உடையில் அவரை அணுகிய காவல் துறையினா் முகவரி கேட்பது போன்று அவரிடம் விசாரிக்கத் தொடங்கினா். அப்போது, அருகில் மறைந்து இருந்த காவல் துறையினா் தப்பிவிடமால் இருக்க கபில் குமாரைச் சூழ்ந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து அவரை காவலா்கள் கைதுசெய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.