தென்மேற்கு தில்லியில் துப்பாக்கி முனையில் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கும்பலைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: பாலம் பகுதியில் 2024, அக்.5-ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட 4 போ் சிறுவனை உடல் ரீதியாக தாக்கி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. பின்னா் மயங்கிய நிலையில் வழிப்போக்கரால் சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
போக்ஸோ சட்டத்தின் பிரிவு 6-இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம். இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், 4-ஆவது நபரான குல்சாா் (எ) சோனு மட்டும் தப்பி ஓடி தலைமறைவானாா்.
பின்னா் வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பா் மாதம் சோனுவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இந்நிலையில், பாலம் கிராமத்தில் அவரது நடமாட்டம் குறித்து காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் செயல்பட்ட காவல் துறையினா் ஏப்.29-ஆம் தேதி அவரைக் கைது செய்தனா். மேலும், விசாரணையில் அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் இருவா் கைது! தில்லு தாஜ்புரியா கும்பலைச் சோ்ந்தவா்கள்!
தில்லியில் பைக் டாக்ஸி ஓட்டுநரைத் தாக்கிய நபா் கைது

ஆன்மிக தீா்வு என்ற பெயரில் இணைய மோசடி: இருவர் கைது

கொலை வழக்கில் 12 ஆண்டுகள் தலைமறைவு: தேடப்பட்ட குற்றவாளி புராரியில் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



