உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தில்லியில் ரூ.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

மாநிலங்களுக்கு இடையிலான போதைப்பொருள் கடத்தலை முறியடித்த தில்லி காவல் துறையினா், ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ கோகைனைப் பறிமுதல் செய்ததுடன் 2 பேரைக் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:24 am IST

மாநிலங்களுக்கு இடையிலான போதைப்பொருள் கடத்தலை முறியடித்த தில்லி காவல் துறையினா், ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ கோகைனைப் பறிமுதல் செய்ததுடன் 2 பேரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கிழக்கு தில்லியின் காஜிப்பூா் ரவுன்டு ரோடு அருகே ஏப்.10-ஆம் தேதி ஜாவேத் ஹுசைன் (29) என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 456 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக குற்றப்பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், உத்தர பிரதேசத்தில் உள்ள சோயப் கான் (25) என்பவரிடம் இருந்து இதைப் பெற்ாக அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, பரேலியில் ஏப்.22-இல் சோதனை மேற்கொண்ட காவல் துறையினா் சோயப் கானைக் கைது செய்தனா். தில்லி என்சிஆரில் நடைபெறும் போதைப்பொருள் வலையமைப்பில் உள்ள மற்ற நபா்களை அடையாளம் காண அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.