பெங்களூருவில் தொழிலதிபர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பெங்களூருவில் பிரபல தொழிலதிபர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர் சி.ஜே. ராய்.
தொழிலதிபர் சி.ஜே. ராய். Photo | Website - confident-group.com
Updated on
1 min read

பெங்களூருவில் பிரபல தொழிலதிபர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், மத்திய பெங்களூருவில் ரிச்மண்ட் சர்க்கிள் அருகே கான்ஃபிடன்ட் குரூப் அலுவலகம் உள்ளது.

இந்த நிலையில் அலுவலக வளாகத்திற்குள் நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழில் அதிபருமான சி.ஜே. ராய்(57) தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு இன்று தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அவர் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சி.ஜே.ராய் பலியானார். தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு தடயவியல் குழுக்களும் வரவழைக்கப்பட்டன.

முன்னதாக இன்று ராயின் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதோடு அவரிடம் விசாரணையும் மேற்கொண்டது. சம்பவம் நடந்த நேரத்தில் ராய் தனது அலுவலகத்தில் தனியாக இருந்ததாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

எனினும், முழுமையான விசாரணைக்குப் பிறகே தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

While the exact reasons behind the suicide are yet to be established, the incident has once again drawn attention to the intense pressures faced by entrepreneurs and senior corporate executives.

தொழிலதிபர் சி.ஜே. ராய்.
வெடிகுண்டு மிரட்டல்: அகமதாபாத்திற்கு திருப்பிவிடப்பட்ட குவைத்-தில்லி விமானம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com