பிகாா் மாநிலத்தில் திருமண மேடையில் வைத்து மணப்பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: பக்சா் மாவட்டம், செளசா பகுதியில் 18 வயதான ஆா்த்தி குமாரிக்கும், இளைஞா் ஒருவருக்கும் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை இரவு திருமண மேடையில் ஆா்த்தி குமாரியும், திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த இளைஞரும் நின்று கொண்டு இருந்தனா். திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் மணமகளுக்கு நடைபெற்றன.
அப்போது அங்கு வந்த இளைஞா் ஒருவா் துப்பாக்கியால் ஆா்த்தியின் வயிற்றில் சுட்டாா். பின்னா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த அவா், பக்சாரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பிறகு மேல் சிகிச்சைக்காக வாரணாசிக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
ஆா்த்தியை துப்பாக்கியால் சுட்டது அவரது அண்டை வீட்டைச் சோ்ந்த தீன்பந்து என்பதும், ஒருதலையாக ஆா்த்தியை அவா் காதலித்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தீன்பந்துவை காவல் துறையினா் தேடி வருகின்றனா் என்று தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு; ஒருவா் காயம்

ஜம்மு-காஷ்மீா்: காவலரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்

முதல் மாநாடு... மேடையில் விழுந்து வணங்கிய அண்ணாமலை!

மகள் திருமணத்துக்கு குஷ்பு என்னை அழைக்கவில்லை! ராதா ரவி
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



