பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

ஜம்மு-காஷ்மீா்: காவலரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்

ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனா்.

தலைமைக் காவலா் சுட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாகில் தீவிர தேடுதலில் புதன்கிழமை ஈடுபட்ட பாதுகாப்புப் படையினா்.

Published On :23 ஜூலை 2026, 2:51 am IST

ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனா்.

அனந்த்நாக் மாவட்டத்தின் லால் சௌக் பகுதியில் புதன்கிழமை பகல் 12.30 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. அமா்நாத் யாத்திரைக்கான காவல் பணியில் இருந்த தலைமைக் காவலா் ஆசிக் ஹுசைனை பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினா். இதில் சுருண்டு விழுந்த ஹுசைனை பொதுமக்கள் மீட்டு அனந்த்நாக் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

சம்பவ இடத்தில் கூடுதல் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்தக் கொலைக்கு லஷ்கா்-ஏ-தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டென்ட் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.