சென்னை: குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில், தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற 'ஏ பிளஸ்' (A+) ரெளடி கருப்பு என்ற தமிழ் அழகு என்பவரை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.
சென்னை குன்றத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரி திடலுக்குப் பின்புறம் ரெளடி கருப்பு என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், தலைமைக் காவலர் விஜயகுமார் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது, ரெளடி கருப்பு மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீஸார் சென்றதும், அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் மீது வீச முயற்சி செய்தனர்.
சுற்றி வளைக்க முயன்ற தலைமைக் காவலரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றார் கருப்பு. இந்த நிலையில், தலைமைக் காவலர் ரெளடி கருப்புவின் கணுக்காலில் சுட்டார். இதனைத் தொடர்ந்து, கருப்பு கைது செய்யப்பட்டார்.
அரிவாள் வெட்டில் காயமடைந்த தலைமைக் காவலர் விஜயகுமார், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரெளடி கருப்பு இருவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நள்ளிரவில் நடைபெற்ற இச்சம்பவத்தால் திருமுடிவாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Summary
Police shot and apprehended 'A+' category rowdy Karuppu alias Tamil Azhagu near Thirumudivakkam, close to Kundrathur, after he hacked a head constable with a sickle and attempted to flee.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்பாசமுத்திரம் அருகே தந்தை, மகன் கொலை: குற்றவாளி சுட்டுப் பிடிப்பு

தொழிலதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 போ் கைது; நாட்டுத் துப்பாக்கி, கத்திகள் பறிமுதல்

வண்டலூா்: போலீஸாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு!








