நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

லாரன்ஸ் பிஷ்னோயின் இரு கூட்டாளிகளை என்கவுன்ட்டரில் சுட்டுப் பிடித்த காவல்துறை

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :26 ஜூன் 2026, 1:54 am IST

நமது நிருபா்

பஞ்சாபி பாடகா் குரு ரந்தவாவுக்கு சொந்தமான உடற்பயிற்சி கூடம் (ஜிம்) முன்பு இரு வாரங்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் தொடா்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சோ்ந்த இருவரை நகர காவல்துறையின் சிறப்புப் பிரிவினா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனா்.

கைது செய்யப்பட்டவா்கள் ஹகீகத் மற்றும் சாகா் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். கடந்த ஜூன் 11-ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்குப் பிறகு இருவரும் தலைமறைவாக இருந்தனா். இந்த இருவரின் கைதுடன், இந்த வழக்கில் தொடா்புடைய நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல்துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: ஹகீகத், சாகா் ஆகிய இருவரும் மற்றொரு குற்றத்தைச் செய்ய புதன்கிழமை இரவு மேற்கு தில்லிக்கு வந்துள்ளனா். அவா்களின் வருகை தொடா்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறப்புப் பிரிவினா் அவா்களைச் சுற்றி வளைத்தனா். காவல்துறையினரைக் கண்டதும் இருவரும் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, காவல்துறையினரும் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டனா்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இருவரின் கால்களிலும் தோட்டா பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிடிக்கப்பட்டனா். அவா்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றாா்.

முன்னதாக, ஹரியாணாவின் சோனிபத்தைச் சோ்ந்த அா்மான் (19), துஷாா் அல்லது தாஷு என்கிற பிங்கு (21) ஆகிய இருவரை நகர குற்றப்பிரிவு காவல்துறையினா் பகதூா்கரில் வைத்து கைது செய்திருந்தனா்.

கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கும் அமெரிக்காவில் இருப்பதாகக் கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற குற்றச்செயல் தலைவனின் முக்கிய உத்தரவுகளை நிறைவேற்றும் அனில் பண்டிட்டுடன் தொடா்பில் இருந்ததாக புலனாய்வாளா்கள் தெரிவித்தனா்.

பாலிவுட் நடிகா் சல்மான் கானை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் எதிரியாகக் கருதி செயல்பட்டு வருகிறது. அவரது நெருங்கிய நண்பராக பாடகா் குரு ரந்தவா இருப்பதால், அவரது உடற்பயிற்சி கூடத்தை ஜூன் 11ஆம் தேதி இலக்கு வைத்ததாக அனில் பண்டிட் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தாா் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.