நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தந்தை மற்றும் 5 வயது மகன் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் வெள்ளிக்கிழமை அதிகாலை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி, அம்பாசமுத்திரம் அருகே உள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (35) மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ் ஆகியோர் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி 11 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரையும் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து கொலையாளிகளையும் கைது செய்யக் கோரி, உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் கடந்த ஒரு வாரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம், காவல்துறையினரின் சமரசப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, 7-வது நாளான வியாழக்கிழமை(ஜூலை 9) உடல்களைப் பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகளைச் செய்தனர். தற்போது அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குற்றவாளி சுட்டுப்பிடிப்பு
இந்த நிலையில், தந்தை, மகன் கொலை வழக்கில் சிலரை தேடிவந்த நிலையில் தலைமறைவாக இருந்த 12 ஆவது குற்றவாளி கிருஷ்ணன் என்கிற அஜித் வீரவநல்லூர் 80 அடி கால்வாய் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீசார் அங்கு விரைந்தனர்.
அஜித்தை போலீசார் சுற்றி வளைத்தபோது, அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசாரை நோக்கித் தாக்கினார். இதில் காவலர் பரமசிவத்திற்கு இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீசார், தற்காப்புக்காக அஜித்தின் காலில் துப்பாக்கியால் சுட்டனர்.
காயமடைந்த அஜித்தும், காவலர் பரமசிவமும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி நேரில் சென்று காவலரின் நலம் குறித்து விசாரித்தார்.
குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்
இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய சுபாஷ் என்பவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவருக்கு உடல்நலக் குறைவு (உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பாதிப்பு) இருந்ததால் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான மணி என்கிற மணிமாறன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
14 பேர் கைது
நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் இதுவரை சிறார் உள்பட மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகின்றனர்.
Summary
Father and son murdered near Ambasamudram; culprit shot and captured...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வழிப்பறி வழக்கு குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது
வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 4 போ் கைது
வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் மூவா் கைது

லாரன்ஸ் பிஷ்னோயின் இரு கூட்டாளிகளை என்கவுன்ட்டரில் சுட்டுப் பிடித்த காவல்துறை
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan




