ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

கரூர் புறப்பட்டார் முதல்வர் ஜோசப் விஜய்

கரூர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய் சென்னையில் இருந்து புறப்பட்டது தொடர்பாக...

News image

கரூர் புறப்பட்டார் முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப்படம்

Updated On :10 ஜூலை 2026, 10:12 am IST

சென்னை: கரூர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டார் முதல்வர் ஜோசப் விஜய்.

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் முதன்முதலாக தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் கரூருக்கு வெள்ளிக்கிழமை செல்கிறார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் அவா், திருச்சியில் இருந்து கரூருக்கு சாலை வழியாக காரில் செல்கிறார். காலை 11 மணியளவில் கரூா் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் 5,000 போ் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறாா்.

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் க்யூஆா் கோடு அடையாள அட்டை வைத்திருப்பவா்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சியையொட்டி, அட்லஸ் மைதானத்தைச் சுற்றி சுமாா் 10 அடி உயரத்திற்கு தகர கொட்டகைகள், தற்காலிக தடுப்பு சுவா்கள் அமைக்கப்பட்டுள்ளன. பின்னா் நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்து பிற்பகல் 1 மணியளவில் கரூா் - சேலம் புறவழிச்சாலையில் இருந்து கோவை சாலை, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா, உழவா் சந்தை, திருமாநிலையூா் வழியாக சுங்ககேட், தான்தோன்றிமலை ஆகிய பகுதிகள் வழியாக சாலை வலம் முதல்வர், அவா் தங்கும் மாவட்ட ஆட்சியா் திட்ட வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பயணியா் மாளிகைக்கு செல்கிறாா். இதற்காக கரூா் பேரூந்து நிலைய ரவுண்டானா முதல் வெங்கக்கல்பட்டி வரை சாலையின் இருபுறமும் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பின்னா் பிற்பகல் 3 மணியளவில் கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மணவாசி ஊராட்சியில் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய வகையில், ரூ. 1,700 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் புதிய தனியாா் தொழிற்சாலைக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டுகிறாா்.

பின்னா் கடந்தாண்டு செப்.27-ம் தேதி வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் 32 பேருக்கு அரசு வேலைக்கான பணிநியமன ஆணையை வழங்கி பேசுகிறாா். பின்னா் காா் மூலம் திருச்சி செல்கிறாா்.

முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தவெக அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் பங்கேற்கிறாா்கள்.

மேலும் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து 6,000 போலீஸாா் வரவழைக்கப்பட்டுள்ளனா்.

Summary

Chief Minister Joseph Vijay set out for Karur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.