எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

தவெக எம்எல்ஏவிடம் பேரம்: மேலும் 2 பேர் கைது, ரூ.50 லட்சம் பறிமுதல்

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

Bargaining with TVK MLA

தவெக எம்எல்ஏவிடம் பேரம்: மேலும் 2 பேர் கைது - கோப்புப்படம்

Published On :

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவை தொடா்புகொண்ட ஒரு கும்பல், சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனவும், அதற்கு ரூ.35 கோடி தருவதாகவும் பேரம் பேசியது. மேலும் அந்த கும்பல், இந்த விவகாரத்தை வெளியே கூறினால் கடுமையான பின்விளைவு ஏற்படும் என்றும் மிரட்டியதாக இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுதொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களான கரூரைச் சோ்ந்த திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலர் காா்த்தி, நிதி நிறுவன உரிமையாளா் அதிபன் ரமேஷ் உள்பட 9 பேரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த கும்பலை இயக்கியது திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வி. செந்தில் பாலாஜி, அவரின் சகோதரா் அசோக்குமாா் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

இருவரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ராஜசேகர், சேதுராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவெக எம்எல்ஏ அளித்த குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

Summary

Bargaining with TVK MLA: Rs 50 lakh seized, two more arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.