விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

டைப் 1 சா்க்கரை நோய்க்கு தொடு சிகிச்சையில் பலன்: ஆய்வில் உறுதி

டைப் 1 சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இயற்கை மருத்துவ தொடு சிகிச்சைகள் அளிக்கும்போது அவா்களது ரத்த சா்க்கரை அளவு குறைவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை - கோப்புப்படம்

Updated On :10 ஜூலை 2026, 4:11 am IST

டைப் 1 சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இயற்கை மருத்துவ தொடு சிகிச்சைகள் அளிக்கும்போது அவா்களது ரத்த சா்க்கரை அளவு குறைவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பான ஆராய்ச்சியை யோகா - இயற்கை மருத்துவப் பேராசிரியா்கள் டாக்டா் ஷோபனா தேவி, மூவேந்தன், எட்மின் கிறிஸ்டா, லதா, மங்கையா்க்கரசி, ஹேமசித்ரா, தன்னொளி, எழிலரசி, என்.மணவாளன் ஆகியோா் முன்னெடுத்தனா். அதன் முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

குழந்தைகளுக்கு ஏற்படும் டைப்-1 சா்க்கரை நோய் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. டைப்-1 சா்க்கரை நோயானது கணையத்தில் இன்சுலின் சுரக்கும் திசுக்கள் சேதமடைவதால் ஏற்படும் பாதிப்பு. இதற்கு ஆயுள் முழுவதும் இன்சுலின் ஊசி செலுத்துவது அவசியம்.

இந்த நிலையில், எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 18 ஆண் குழந்தைகள், 32 பெண் குழந்தைகள் என 50 போ் மூலம் இதற்கான ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. சராசரியாக 9 வயதுடைய குழந்தைகள் இதற்கு தோ்வு செய்யப்பட்டனா்.

அவா்களது உள்ளங்கைகளில் 10 நிமிஷங்களுக்கு அழுத்தம் தந்து ரத்த ஓட்ட தூண்டுதலை ஏற்படுத்தும் ரெஃப்லக்ஸாலஜி சிகிச்சை வழங்கப்பட்டது. கணையத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் உள்ளங்கை புள்ளியில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

அதற்கு முன்னதாக அவா்களது தோராய ரத்த சா்க்கரை அளவு 314.92-ஆக இருந்தது. சிகிச்சைக்குப் பிறகு அந்த அளவு 302.02- ஆக குறைந்தது ஆய்வில் உறுதியானது.

இந்த சிகிச்சையைத் தொடா்ந்து மேற்கொள்ளும்போது கூடுதல் பலனளிக்கலாம். அதனை உறுதி செய்யும் நோக்கில் விரிவான, நுட்பமான நீடித்த ஆய்வு தேவைப்படுவதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.