வருங்கால மனைவியால் படுகொலை செய்யப்பட்ட இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வால் தன்னுடைய தந்தையிடம், ஏற்கனவே சியா மற்றும் அவரது காதலன் பற்றி சந்தேகத்தை வெளிப்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சியா - கேத்தன் குடும்பங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக இவர்களுக்கு திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்ட நிலையில், சியா - சேத்தன் நட்பு குறித்து கேத்தனுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.
இது பற்றி, அவர் தன்னுடைய தந்தையிடம் கூறி, சியாவின் நட்பு குறித்து விசாரிக்கலாமா என்று கேட்டிருக்கிறார். ஆனால், நெருங்கிய குடும்பத்தினர் மூலம் சியா பற்றி தெரிய வந்ததால் கவலைப்பட ஒன்றும் இருக்காது என்று கேத்தன் தந்தை சமாதானம் செய்திருக்கிறார்.
இருவருக்கும் பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் முடிந்து நவம்பரில் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக ஜெய்ப்பூரில் ரூ.17 கோடியில் அரண்மனையை முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
விருந்தினர்களை அழைத்துச் செல்ல விமானங்கள் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. திருமணத்துக்கு முன்பு இரு வீட்டாரும் பாலி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், கேத்தனின் பாஸ்போர்ட் காணாமல் போனது தெரிய வந்ததால் சுற்றுலா ரத்து செய்யப்பட்டது.
கடைசியாக, கேத்தன், சியாவுடன் மும்பை சென்றிருந்தபோதுதான் பாஸ்போர்ட் தொலைந்திருக்கிறது, அதனை சியா திருடியிருக்க வாய்ப்புள்ளதாகவும் கேத்தன் பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
அண்மையில் குற்றவாளிகள் இருவரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்ற குற்றம் எப்படி நடந்தது என நடித்துக் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். அங்கே கேத்தனுடன் இருந்த போது சியா ஓரிடத்தில் திடீரென அமர்ந்துகொள்ள வேண்டும், அதுதான் சிக்னல் என்றும், உடனே கேத்தனை, காதலன் சேத்தன் தள்ளிவிட வேண்டும் என்று திட்டமிட்டு கொலையை செய்ததை இருவரும் நடித்துக் காட்டியிருக்கிறார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
Summary
Ketan had spoken about his fiancée back then regarding the Pune murder case—but his father didn't listen!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புணே இளம் தொழிலதிபர் சாவில் திடீர் திருப்பம்!! கொலைத் திட்டத்தை தீட்டியது யார்?

சிக்க வைத்த 238 மணி நேர போன் பேச்சு, சிசிடிவி காட்சி! புணே கொலையில் காதலனுடன் சிக்கிய இளம்பெண்ணின் சூப்பர் பிளான்!

கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞன் சாவில் காதலனுடன் சிக்கிய இளம்பெண்!!
மனைவி, குழந்தை மீது தாக்குதல்: 2 வயது மகன் உயிரிழப்பு, தந்தை கைது
விடியோக்கள்

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |



