வாட்ஸ்ஆப்பில் அறிமுகமாக இருக்கும் யூஸர்நேம் பயன்பாட்டுக்கு தற்காலிகத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகின் முன்னணி தகவல் தொடா்பு செயலியான வாட்ஸ்ஆப்பை, பல கோடி போ் தற்போது பயன்படுத்தி வருகின்றனா். தற்போது வாட்ஸ் ஆப்பில் ஒருவா் இன்னொருவரிடம் தகவல் பரிமாறுகையில், பயனா்களின் செல்போன் எண்ணை பரஸ்பரம் அறிய முடியும். ஆனால் இதற்கு மாற்றாக செல்போன் எண்களை பகிராமலேயே யூஸர்நேம் மூலம் தகவல் பரிமாறும் வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்ட பதிவில், பயனா்களின் தனிநபா் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில், குழு தகவல் பரிமாற்றம் அல்லது புதிய பயனா்களிடம் உரையாடுதல் உள்ளிட்டவற்றின்போது செல்போன் எண்ணை பகிராமலேயே யூஸர்நேம் அடிப்படையில் பயனா்கள் தகவலை பரிமாறும் வசதியை இந்தாண்டு இறுதியில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும், இந்த வாரம் முதல் யூஸர்நேம் முன்பதிவு தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மத்திய அரசு ஆய்வு
இந்த வசதி, போலி கணக்கு மற்றும் மோசடிக்கு வழிவகுக்கக்கூடும். மக்களின் பாதுகாப்பிலும், சமூகத்திலும் எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும்.
தேச பாதுகாப்பு அல்லது மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது. ஆதலால் வாட்ஸ்ஆப்பின் திட்டத்தை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது என்று தெரிவித்திருந்தன.
தற்காலிகத் தடை
இந்த நிலையில், வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக அறிமுகம் செய்யவிருந்த யூஸர்நேம் வசதி மோசடிக்கு வழிவகுக்கக்கூடும் என்று கவலை தெரிவித்திருந்த மத்திய அரசு, தற்போது வாட்ஸ்ஆப்பில் யூஸர்நேம் பயன்பாட்டுக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
செல்போன் எண் இல்லாத பட்சத்தில் சைபர் மோசடி குற்றவாளிகளை கண்காணிப்பதில் சைபர் கிரைம் பிரிவிற்கு பெரும் சிக்கல் ஏற்படக் கூடும். புதிய யூஸர்நேம் வசதி குறித்து மூன்று நாள்களில் விளக்கம் அளிக்க மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வாட்ஸ்ஆப்பின் புதிய செயல்பாட்டின் சட்டப்பூர்வ தன்மைகள் குறித்த ஆய்வு விசாரணை முடியும்வரை யூஸர்நேம் வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தக் கூடாது எனவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப் நிறுவன அதிகாரிகள் விளக்கம்
இந்தியாவில் யூஸர்நேம் பயன்பாடு குறித்து அடுத்த மூன்று நாள்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், வாட்ஸ்ஆப்பில் யூஸர்நேம் பயன்பாடு குறித்த மோசடியை தடுக்க பல அடுக்கு பாதுகாப்பை உருவாக்கியுள்ளோம். ஆள் மாறாட்டத்தை தடுக்க முக்கிய பிரமுகர்கள், அரசு அமைப்புகள், சரிபார்க்கப்பட்ட மெட்டா கணக்குகள் போன்ற முக்கியமான பெயர்களை பாதுகாப்பாக வைத்துள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Summary
The government has asked Meta to furnish a detailed explanation on the username feature in the next three days, and has directed the company to not roll out the feature until consultation on the matter is over
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









