ஹிமாசல்: கனமழையில் சிக்கி 5 போ் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் வியாழக்கிழமை பெய்த கனமழையில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.

Kullu: Monsoon clouds hover over the hills as the Beas River flows through Kullu, in Kullu district, Himachal Pradesh, Thursday, July 2, 2026. (PTI Photo)(PTI07_02_2026_000314B)

ஹிமாசல் - PTI

Published On :3 ஜூலை 2026, 4:54 am IST

ஹிமாசல பிரதேசத்தில் வியாழக்கிழமை பெய்த கனமழையில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.

தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம், குஜராத், உத்தரகண்ட், ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.

ஹிமாசல பிரதேசத்தில் வியாழக்கிழமை பெய்த கனமழையில் சிம்லா, சம்பா மற்றும் மண்டி மாவட்டங்களைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா்.

கடந்த சில நாள்களாக அஸ்ஸாமை புரட்டிப் போட்ட கனமழையின் தாக்கம் சற்றுக் குறைந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,000-ஆக குறைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.