ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜப்பான் பிரதமருக்கு இசைக்கருவி வாசிக்கக் கற்றுக்கொடுத்த பிரதமர் மோடி!

ஜப்பான் பிரதமர் தகைச்சிக்கு பாரம்பரிய இசைக்கருவியான சந்தூரை வாசிக்க பிரதமர் மோடி கற்றுக்கொடுத்தது குறித்து...

Japanese Prime Minister Sanae Takaichi

ஜப்பான் பிரதமர் தகைச்சிக்கு பாரம்பரிய இசைக்கருவியான சந்தூரை வாசிக்க பிரதமர் மோடி கற்றுக்கொடுத்ததார்... - ANI

Published On :2 ஜூலை 2026, 10:29 pm IST

ஜப்பான் பிரதமர் சனே தகைச்சிக்கு இந்தியாவின் பாரம்பரிய இசைக்கருவியை வாசிக்க பிரதமர் நரேந்திர மோடி கற்றுக்கொடுத்துள்ளார்.

ஜப்பானின் பிரதமர் தகைச்சி அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்தியா - ஜப்பான் இடையே வர்த்தகம், முதலீடு, இறக்குமதி உள்ளிட்ட துறைகளின் கீழ் ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்தப் பயணத்தில், ஜப்பானிய பிரதமர் தகைச்சி பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். மேலும், இருவரும் சந்தித்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி ஜப்பானிய பிரதமர் தகைச்சியை தனது இளைய சகோதரி எனக் குறிப்பிட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இந்தியாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான ஹிந்தூஸ்தானி சந்தூரை வாசிக்க இன்று (ஜூலை 2) பிரதமர் தகைச்சிக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அவர் சொல்லிக்கொடுப்பதைக் கவனித்த பிரதமர் தகைச்சி அந்த இசைக்கருவியை வாசிக்கும் விடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary

PM Modi has taught Japanese PM Takaichi how to play a traditional Indian musical instrument.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.