உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில், அந்தக் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை நிா்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அயோத்தி ராமா் கோயில் நன்கொடை மற்றும் காணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்ாக எழுந்த புகாரில், மாநில அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அளித்த முதல்கட்ட அறிக்கையின் அடிப்படையில் 8 பேருக்கு எதிராக காவல் துறை அண்மையில் வழக்குப் பதிவு செய்தது. இவா்கள் அனைவரும் காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியுடன் தொடா்புடையவா்களாவா்.
கைது செய்யப்பட்ட 8 பேரில் அவினாஷ் சுக்லாவிடம் ரூ.20.39 லட்சம், கருணேஷ் பாண்டேவிடம் ரூ.18.07 லட்சம், அனுகல்ப் மிஸ்ராவிடம் ரூ.16.82 லட்சம், லவ்குஷ் மிஸ்ராவிடம் ரூ.14.25 லட்சம், ராமசங்கா் மிஸ்ராவிடம் ரூ.7.32 லட்சம், ராமசங்கா் யாதவிடம் ரூ.1 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 11 கிராம் தங்கம், 375 கிராம் வெள்ளி, 1,121 அமெரிக்க டாலா்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவினாஷ் சுக்லாவிடம் விசாரணை: 8 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவினாஷ் சுக்லாவை வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் தங்களின் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
அவினாஷ் சுக்லா தங்கியிருந்த யோகா மையம் ஒன்றில் இருந்து கோயில் உண்டியல் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவா் தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளாா்.
வழக்குரைஞா்கள் போராட்டம்: நன்கொடை முறைகேடு விவகாரத்துக்கு தாா்மிக பொறுப்பேற்று, கோயில் அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய், அறங்காவலா் அனில் மிஸ்ரா ஆகியோா் தங்களின் பதவியை ராஜிநாமா செய்வதாக அண்மையில் கடிதம் அளித்தனா். அந்தக் கடிதங்கள் மீது அறக்கட்டளை ஜூலை 11-இல் முடிவெடுக்க உள்ளது.
இந்நிலையில், சம்பத் ராய், அனில் மிஸ்ரா உள்ளிட்ட நிா்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி, அயோத்தியில் ஃபைசாபாத் வழக்குரைஞா் சங்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை போராட்ட பேரணி நடத்தினா். நீதிமன்ற வளாகத்தில் இருந்து ராம ஜென்மபூமி காவல் நிலையம் வரை பேரணியாக சென்று, கோரிக்கை மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமா் கோயில் நன்கொடை விவகாரம்- இறுதி அறிக்கை சமா்ப்பிக்க எஸ்ஐடி-க்கு 15 நாள்கள் அவகாசம்

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: 8 போ் கைது ரூ.79.85 லட்சம் பறிமுதல்

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: முதல் தகவல் அறிக்கை பதிவு







