மகாராஷ்டிர மாநிலம் புணேவில், இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வால் கொலையல், மூன்றாம் நபர் ஒருவருக்கும் இந்த கொலை பற்றி முன்பே தெரிந்திருந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொலை வழக்கில், சியா - சேத்தன் இருவரும் கைதான நிலையில், சேத்தனின் பள்ளி வகுப்புத் தோழன் ஒருவனும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கேத்தன் அகர்வால் கொலை செய்யப்படுவதற்கு முன்பு, இந்த கொலைத் திட்டம் குறித்து, சேத்தன் தன்னுடைய நண்பருக்குத் தெரிவித்திருப்பதும், அவரிடம் விசாரணை நடத்தினால், முக்கிய தடயங்கள் கிடைக்கலாம், விசாரணையில், இவர் முக்கிய சாட்சியாகவும் இருப்பார் என்று காவல்துறை கருதுகிறது.
கொலைத் திட்டம் குறித்து அறிந்திருந்த அந்த நபர், கொலைக்குப் பிறகும் கொலையாளிகள் சியா - சேத்தனை சந்தித்துப் பேசியிருக்கிறார். இவர்கள் அப்போது என்ன பேசினார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒருவேளை, அனைத்தும் அந்த மூன்றாம் நபருக்குத் தெரிந்திருந்தால், அவர் மூலம் பல முக்கிய ஆதாரங்கள் கிடைக்கலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இதுவரை, அந்த மூன்றாம் நபரை முக்கிய சாட்சியாக மாற்றவதா? கொலையில் குற்றவாளிகளுக்கு உதவியதாக வழக்கில் சேர்ப்பதா என்று காவல்துறை இன்னமும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
கேத்தனுக்கு சியாவுடன் பிப்ரவரியில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து நவம்பரில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், காதலன் சேத்தனுடன் சேர்ந்து சியா, கேத்தனை மலைக்கோட்டையிலிருந்து தள்ளி கொலை செய்தார்.
Summary
Sudden twist in the Ketan murder case! A third person who knew about the murder beforehand?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேத்தன் கொலை வழக்கில் தடுமாறும் விசாரணை! சவாலாக மாறும் சாட்சிகள்

கேத்தனை தள்ளிவிட ஒத்திகை! கொலையின் பின்னணியில் மணமகனின் திக்குவாய், தலைமுடி பிரச்னை?

புணே கொலை.. வருங்கால மனைவி பற்றி முன்பே கணித்த கேத்தன்! கேட்காத தந்தை!

புணே இளம் தொழிலதிபர் சாவில் திடீர் திருப்பம்!! கொலைத் திட்டத்தை தீட்டியது யார்?
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



