என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்? துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்அவதூறாக பேசுபவர்கள் மீது 100% கடும் நடவடிக்கை: நிர்மல் குமார் எச்சரிக்கை
/

என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா

என்மீது மமதா பானர்ஜி குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன் என்று சந்திரிமா பட்டாச்சார்யா தெரிவித்தது பற்றி...

News image

சந்திரிமா பட்டாச்சார்யா - கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2026, 4:59 pm IST

என்மீது மமதா பானர்ஜி குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன் என்று சந்திரிமா பட்டாச்சார்யா சனிக்கிழமை (ஜூலை 4) தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மமதா ஆதரவு அணி, அதிருப்தி அணி என கட்சி இரண்டாகப் பிரிந்தது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி பிரிவினர் அக்கட்சியின் முழு உரிமையையும் கோரி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸுன் தற்காலிக அலுவலகத்தை ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி அணி நேற்று கைப்பற்றியது.

இந்த நிலையில், மமதா பானர்ஜியின் ஆதரவுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநிலத் தலைவராகப் பதவி வகித்து வந்த சந்திரிமா பட்டாச்சார்யா இன்று (ஜூலை 4) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மேலும் கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து பேசிய சந்திரிமா பட்டாச்சார்யா, “நேற்று என்ன நிகழ்ந்தது என்று பார்த்தீர்கள். திரிணமூல் பவனை அதிருப்தி அணியினர் கைப்பற்றினர். அதன் பின்னர், மமதா பானர்ஜி என்னை அலைபேசியில் அழைத்துப் பேசினார். அதிருப்தி அணியினரிடம் அலுவலகத்தை ஒப்படைத்துவிட்டதாக என்மீது குற்றம் சாட்டினார். இது என்னை பாதித்தது” என்று தெரிவித்தார்.

Summary

Chandrima Bhattacharya stated on Saturday (July 4) that she left the party because Mamata Banerjee had accused her.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.