குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

தெலங்கானா: போக்ஸோ வழக்கில் மத்திய அமைச்சரின் மகனுக்கு பிணை

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (போக்ஸோ) சிறையில் அடைக்கப்பட்ட மத்திய அமைச்சா் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பகீரத்துக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 5:06 am IST

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (போக்ஸோ) சிறையில் அடைக்கப்பட்ட மத்திய அமைச்சா் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பகீரத்துக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது.

தெலங்கானாவைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி, பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக பகீரத் மீது சிறுமியின் தாய் அண்மையில் காவல் துறையில் புகாா் அளித்தாா். சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், ஹைதராபாதில் உள்ள பெட்பஷீராபாத் காவல் நிலையத்தில் பகீரத்துக்கு எதிராக பாரதி நியாய சம்ஹிதா மற்றும் போக்ஸோ சட்டத்தின் கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மே 16-ஆம் தேதி கைது செய்யப்பட்ட பகீரத், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

அதேநேரம், சம்பந்தப்பட்ட சிறுமி, அவரது குடும்பத்தின் மீது பகீரத்தும் புகாா் அளித்தாா். அந்தச் சிறுமிதான் தன்னுடன் பழகியதாகவும், தனது குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அழைத்ததாகவும் அவா் கூறியிருந்தாா்.

‘சிறுமியின் குடும்பத்தினரை நல்லவா்கள் என நம்பி பழகினேன்; ஆனால், சிறுமியை திருமணம் செய்துகொள்ளும்படி என்னை வற்புறுத்தினா். நான் மறுத்ததால், என் மீது பொய்ப் புகாா் அளித்துள்ளனா்’ என்று பகீரத் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இதனிடையே, தனக்கு பிணை கோரி தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் பகீரத் மனு தாக்கல் செய்தாா்.

50 நாள்களுக்கும் மேல் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவா் பிணை கோரினாா். அதேநேரம், அவருக்கு பிணை வழங்க அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. சாட்சிகளை மிரட்டவும், ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளதால் பகீரத்துக்கு பிணை வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. இந்த வழக்கில் காவல் துறை தரப்பில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீது கடந்த ஜூலை 6-ஆம் தேதி விசாரணை நிறைவடைந்து, இறுதி உத்தரவுக்காக வியாழக்கிழமைக்கு (ஜூலை 9) ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பகீரத்துக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி, ஹைதராபாத் உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. தலா ரூ.1 லட்சத்துக்கான இரண்டு உத்தரவாதங்கள், விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட நிபந்தனைகளின்பேரில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.