ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் நாடு இந்தியா: நியூசிலாந்தில் பிரதமர் மோடி பேச்சு!

உலகளவில் பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் நாடு இந்தியா என்று பிரதமர் மோடி பேசியது பற்றி...

News image

நியூசிலாந்து பிரதமருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. - படம் - எக்ஸ்

Updated On :11 ஜூலை 2026, 3:44 pm IST

உலகளவில் பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் நாடு இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி நியூசிலாந்தில் பேசியுள்ளார்.

கடந்த ஜூலை 6 ஆம் தேதி அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை 8 அம் தேதி ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு முக்கிய பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்தார்.

இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் பிரதமர் மோடி இடையிலான சந்திப்பில் இருநாடுகள் இடையிலான முக்கிய கூட்டுறவு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து தன்னுடைய பயணத்தின் அடுத்த கட்டமாக நியூசிலாந்து சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கு நேரில் சென்று அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் நேற்று வரவேற்றார்.

இந்த நிலையில், ஆக்லாந்தில் நடைபெற்ற சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது:

உலகளவில் பொருளாதாரத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்கிறது. உலகளவில் இந்தியாதான் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக உள்ளது. செல்போன் டேட்டா பயன்பாட்டில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

செல்போன் உற்பத்தியிலும், இந்தியாதொலைத்தொடர்பு சந்தையிலும் மற்றும் கோதுமை உற்பத்தியிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய பால் மற்றும் மீன் உற்பத்தியாளராக திகழும் இந்தியா வாகனச் சந்தையிலும் ஸ்டார்ட்அப்-ஐ ஊக்குவிப்பதிலும் மூன்றாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, எரிசக்தி உற்பத்தியிலும் இந்தியா விரைவில் முக்கிய இடத்தைப் பிடிக்கும். ஆகையால், உலகின் பல நாடுகள் இந்தியாவின் எண்ம கட்டமைப்புத் துறையில் ஆர்வம் காட்டி வருகிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்தின் சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி.

நியூசிலாந்தின் சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி. - படம் - எக்ஸ்

Summary

Prime Minister Narendra Modi has stated in New Zealand that India is the fastest-growing economy in the world.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.