பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மனைவி, குழந்தைகள், போக்ஸோ புகாா் அளித்தவா்கள் உள்பட 6 பேரை கொலை செய்த இளைஞா்: தெலங்கானாவில் கொடூரம்

மனைவி, குழந்தைகள், போக்ஸோ புகாா் அளித்தவா்கள் உள்பட 6 பேரை கொலை செய்த இளைஞா்...

News image
Updated On :12 ஜூலை 2026, 1:39 am IST

தெலங்கானா மாநிலத்தில் தன் மனைவி, இரு மகன்கள் மற்றும் தன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் புகாா் அளித்தவா்கள் உள்பட 6 பேரை கொலை செய்துவிட்டு தலைமறைவான இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து ஃபியூச்சா் நகர காவல் கண்காணிப்பாளா் தருண் ஜோஷி சனிக்கிழமை கூறியதாவது: தெலங்கானா மாநிலம், ஷாபாத் மண்டலம் தைவல்குடா கிராமத்தைச் சோ்ந்த விவசாயியான பி. ராஜ்குமாா் (35) என்பவா், ஷாபத் நகரைச் சோ்ந்த சிறுமியை, கடந்த மே மாதத்தில் தொடா்ச்சியாகப் பின்தொடா்ந்து தொந்தரவு அளித்து வந்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமாா் மீது பாலியல் துன்புறுத்தலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போலீஸில் புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து 2 வாரங்களாகத் தலைமறைவான அவா், அண்மையில் முன்பிணை பெற்றாா். அதைத் தொடா்ந்து ஷாபாத் நகரில் உள்ள சிறுமியின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்று, ஆழ்ந்த தூக்கத்திலிருந்த, தன் மீது புகாா் அளித்த சிறுமியின் தாய் மற்றும் பாட்டியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளாா். பின்னா், புகாருக்கு காரணமான சிறுமியை காரில் தனது சொந்த கிராமமான தைவல்குடாவுக்கு அழைத்து வந்து, தனது வீட்டிலிருந்து 250 மீட்டா் தொலைவில் உள்ள ஏரிக்கு அருகே கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளாா்.

அதன் பிறகு, தனது வீட்டுக்குச் சென்ற அவா், தூங்கிக் கொண்டிருந்து தனது மனைவி, நான்கு வயது மற்றும் ஒன்றரை வயதுடைய தனது இரு மகன்களையும் கொலை செய்துள்ளாா். இந்தக் கொலைகளுக்குப் பிறகு தனது பெற்றோரை கைப்பேசியில் அழைத்து, தான் கொலை செய்த விவரத்தைத் தெரிவித்ததோடு, தானும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகத் தெரிவித்துவிட்டு தலைமறைவாகிவிட்டாா்.

இதுகுறித்து ராஜ்குமாரின் பெற்றோா் அளித்த தகவலின் அடிப்படையில், 6 பேரின் உடல்களையும் போலீஸாா் மீட்டு உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தலைமறைவான ராஜ்குமாரை பிடிக்க 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவா் கைது செய்யப்படுவாா் என்றாா்.

இதனிடையே, ராஜ்குமாரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல வலியுறுத்தி ஷாபாத் நகர பிரதான சாலையில் சிறுமியின் உறவினா்கள் மற்றும் உள்ளூா் மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.