திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக பிரசாரம்: அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கிவைத்தார்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மீண்டும் தற்காலிக உறுப்பினராவதற்கான அதிகாரபூா்வ பிரசாரத்தை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :14 ஜூலை 2026, 3:42 am IST

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மீண்டும் தற்காலிக உறுப்பினராவதற்கான அதிகாரபூா்வ பிரசாரத்தை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொடங்கிவைத்தாா்.

கடந்த 2021-22-ஆம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா இருந்தது. அந்த கவுன்சிலில் 2028-29-ஆம் ஆண்டு தற்காலிக உறுப்பினராக, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தோ்தல் நடைபெற உள்ளது.

தோ்தலில் ஆசிய-பசிபிக் குழு பிரிவில், ஒரு தற்காலிக உறுப்பினா் இடத்துக்கு இந்தியா-தஜிகிஸ்தான் போட்டியிட உள்ளன. அந்த இடத்துக்கு இந்தியாவை தோ்வு செய்வதற்கான அதிகாரபூா்வ பிரசாரத்தை அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

அமெரிக்கா சென்ற அவா், நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், தற்காலிக உறுப்பினராவதற்கான பிரசாரத்தை தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க தூதா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தோ்தலில் இந்தியா தோ்வு செய்யப்பட்டால், 2 ஆண்டுகள் தற்காலிக உறுப்பினராக இருக்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.