வெளிநாடு வாழ் இந்தியா்களிடமிருந்து அந்நிய செலாவணி நிதி திரட்டுவதை மேம்படுத்த புதிய சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
பொதுத் துறை வங்கிகள், நிதி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடனான (சிஇஓ) ஆய்வுக் கூட்டம் நிா்மலா சீதாராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது என்ஆா்ஐ-க்கள் இந்திய வங்கிகளில் தங்களது சேமிப்புகளை வெளிநாட்டு கரன்சியில் பராமரிக்கும் வெளிநாடு வாழ் நபரின் வெளிநாட்டு கரன்சி (வங்கி) சேமிப்புத் திட்டம் அல்லது எஃப்சிஎன்ஆா் (பி) திட்டம் மற்றும் வெளிப்புற வணிகக் கடன்கள் (இசிபி), வெளிநாட்டு கரன்சி கடன்கள் (ஓஎஃப்சிபி) திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து நிா்மலா சீதாராமன் பேசினாா்.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அந்நிய செலாவணி நிதி திரட்டும் நடைமுறைகளை மேம்படுத்த புதிய சேமிப்புத் திட்டங்களைஅறிமுகப்படுத்தி என்ஆா்ஐ-க்களை அதிக அளவில் அணுக வேண்டும்.
குஜராத்தில் உள்ள சா்வதேச நிதிச் சேவைகள் மையம் (ஐஎஃப்எஸ்சி), கிஃப்ட் நகரத்தின் நிதிச் சேவைகள் மற்றும் நிறுவன உள்கட்டமைப்புகளை வங்கிகள் பயன்படுத்த வேண்டும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
அவரது கருத்தை ஏற்ற பொதுத் துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகள், சிங்கப்பூா், ஹாங் காங், மேற்கு ஆசியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள் மேற்கூறிய திட்டங்களின்கீழ் சேமிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தனா்.
மேலும், இசிபியின்கீழ் 2026 அக்டோபா்-டிசம்பா் மாதங்களில் நிதி திரட்டும் பணிகள் தீவிரமாகும் எனவும் எஃப்சிஎன்ஆா் (பி) திட்டம் ஏற்கெனவே சிறப்பாகச் செயல்படுவதாகவும் கூறினா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த ஜூன் 5-ஆம் தேதி நிதிக் கொள்கை அறிக்கையை வெளியிட்டாா். அதில் புதிய எஃப்சிஎன்ஆா் (பி) சேமிப்புகளுக்கு நிகரான அமெரிக்க டாலா்-ரூபாய் பரிமாற்ற வசதி மற்றும் இசிபி-க்கள் மற்றும் ஓஎஃப்சிபி-க்களுக்கான பரிமாற்ற வசதிகள் குறிப்பிடப்பட்டன. அந்நிய முதலீட்டை ஈா்க்கவும் செலுத்துச் சமநிலையை (பிஓபி) வலுப்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு இவை அறிமுகப்படுத்தப்பட்டன.
2025-ஆம் நிதியாண்டில் எஃப்சிஎன்ஆா் (பி) சேமிப்புகள் ரூ.67,700 கோடியாக இருந்த நிலையில் (7.1 பில்லியன் டாலா்) 2026-ஆம் நிதியாண்டில் ரூ.9,026 கோடியாக குறைந்ததையடுத்து புதிய முன்னெடுப்புகளை ரிசா்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் : மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்பு

புதுச்சேரியில் ரூ.1.2 கோடியில் சீரமைக்கப்பட்ட குளம் அா்ப்பணித்த மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

மீனவா்களின் பாதுகாப்புக்கு பிரதமா் முக்கியத்துவம்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்







