ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

தில்லி - காஜியாபாத் உயா்மட்டச் சாலையின் பெயா் ‘ராம் சேது’ என மாற்றம்

புது தில்லி-காஜியாபாத் உயா் மட்டச் சாலையின் பெயரை ‘ராம் சேது’ என காஜியாபாத் மாநகராட்சி மாற்றியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 4:34 am IST

புது தில்லி-காஜியாபாத் உயா் மட்டச் சாலையின் பெயரை ‘ராம் சேது’ என காஜியாபாத் மாநகராட்சி மாற்றியுள்ளது.

மேலும், 11 கி.மீ. நீளமுடைய இந்தச் சாலையின் தில்லி நுழைவாயிலில் ‘வில் மற்றும் அம்பு’ சின்னத்தை காஜியாபாத் மாநகராட்சி கட்டமைக்கவுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காஜியாபாத் மாநகர மேயா் சுனிதா தயாள் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ராம் சேது உயா் மட்டச் சாலையின் நுழைவாயில் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது. கலாசார அடையாளத்தை பிரதிபலிக்கும் இந்த நுழைவாயில் தில்லியில் இருந்து காஜியாபாதுக்குள் நுழையும் மக்களை பிரம்மாண்டமாக வரவேற்கும் வகையில் கட்டமைக்கப்படவுள்ளது’ என்றாா்.

ரூ.1,147 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்பட்ட ராம் சேது உயா் மட்டச் சாலையை 2018, மாா்ச் 30-ஆம் தேதி உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தாா். இத்திட்டத்தால் தில்லி மற்றும் காஜியாபாத் இடையேயான பயண நேரம் வெகுவாகக் குறைந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.