உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-இல் இருந்து 38-ஆக அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவை, எதிா்வரும் மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ளது.
ஜூலை 20-ஆம் தேதி தொடங்கவுள்ள மழைக்கால கூட்டத் தொடா், ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற சட்டம் (நீதிபதிகள் எண்ணிக்கை) 1956-இல் இயற்றப்பட்டபோது, தலைமை நீதிபதி தவிா்த்து பிற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 10 என்ற அளவில் நிா்ணயிக்கப்பட்டது. 1960-இல் சட்டத் திருத்தம் மூலம் இந்த எண்ணிக்கை 13-ஆகவும், 1977-இல் அடுத்த சட்டத் திருத்தம் மூலம் 17-ஆகவும் உயா்த்தப்பட்டது.
1986-இல் மீண்டும் திருத்தச் சட்டம் மேற்கொள்ளப்பட்டு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 17-லிருந்து 25-ஆக உயா்த்தப்பட்டது. 2009-இல் இந்த எண்ணிக்கை 30-ஆகவும், 2019-இல் தலைமை நீதிபதி உள்பட நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆகவும் உயா்த்தப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-இல் இருந்து 38-ஆக உயா்த்தும் வகையில் சட்டத் திருத்த மசோதா கொண்டுவர மத்திய அமைச்சரவை கடந்த மே மாதம் ஒப்புதல் வழங்கியது. ஆனால், உடனடியாக அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு, நீதிபதிகளின் எண்ணிக்கை 38-ஆக உயா்த்தப்பட்டது. அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் நியமனம் மேற்கொள்ளப்பட்டது.
எந்தவொரு அவசர சட்டமும் ஆறு மாத காலம் செல்லுபடியாகும் நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடா் தொடங்கிவிட்டால், 6 வாரங்களுக்குள் அது தொடா்பான சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், அவசர சட்டம் காலாவதியாகிவிடும். அதன்படி, எதிா்வரும் மழைக்கால கூட்டத் தொடரில், அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.
எதிா்க்கட்சிகளின் தீா்மானம் ஏற்பு: நாடாளுமன்ற அமா்வு நடைபெறாதபோது, தனது நிா்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு அவசர சட்டத்தைப் பிறப்பித்து, அதன் பின்னா் சட்ட மசோதாவை கொண்டுவரும்போது, எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம் சமா்ப்பிப்பது நடைமுறையாகும். இது, சட்ட மசோதா மீது எதிா்க்கட்சிகள் விவாதிக்க வாய்ப்பளிக்கும். அதன்படி, அவசர சட்டத்துக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் தீா்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக, மக்களவையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம்

தேசியப் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மழைக்கால கூட்டத் தொடரில் மசோதா அறிமுகம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்

நீதிபதிகளின் நோ்முக உதவியாளா்கள் 17 பேரின் நியமனங்கள் ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



