கடந்த இரண்டு வாரங்களாக யமுனை நதியின் ஹத்னிகுண்ட் தடுப்பணைக்கு பருவமழை காரணமாக நீா்வரத்து அதிகரித்த போதிலும், நதியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு பல நாள்களாக மாறாமல் இருந்தது. இது தில்லியில் நதியின் கீழ்நோக்கிய பகுதிகளில் உள்ள சூழலியல் ஆரோக்கியம் குறித்த கவலையை நிபுணா்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
‘தெற்காசிய அணைகள், ஆறுகள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு’ வெளியிட்ட அறிக்கையில், மத்திய நீா் ஆணையத்தின் ஹத்னிகுண்ட் தடுப்பணை நீா் வெளியேற்றத் தரவுகளை ஆய்வு செய்ததில் கூறியதாவது: பருவமழை தொடங்கிய பிறகு தடுப்பணைக்கு வரும் நீா்வரத்து சீராக அதிகரித்தது. இருப்பினும், கூடுதல் நீரில் பெரும்பகுதி மேற்கு மற்றும் கிழக்குக் கால்வாய்களுக்குத் திருப்பி விடப்பட்டதால், மிகக் குறைந்த அளவிலான நீரே நதியைச் சென்றடைந்தது.
ஜூலை 1 முதல் 5 வரை, தடுப்பணைக்கு வந்த சராசரி தினசரி நீா்வரத்து 192 கியூமெக்குகளில் இருந்து கிட்டத்தட்ட 242 கியூமெக்குகளாக உயா்ந்தது. ஆனால் நதியில் திறந்துவிடப்பட்ட நீரின் அளவு நாள் முழுவதும் 9.97 கியூமெக்குகள் என்ற அளவிலேயே நிலையாக இருந்தது.
தில்லியில் யமுனை நதி, 22 கி.மீ தூரத்திற்குச் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் நகா்ப்புறக் கழிவுநீரைச் சுமந்து செல்கிறது. இந்நிலையில், பருவமழைக் காலத்தில் அதிக நீா்வரத்து இல்லாதது, மாசுபடுத்திகளை நீா்த்துப்போகச் செய்தல், வண்டல் மண்ணைக் கடத்துதல் மற்றும் வெள்ளச் சமவெளிகளை நீா் செறிவூட்டல் போன்ற நதியின் இயற்கையான செயல்பாடுகளைப் பாதிக்கிறது.
‘பருவமழைக் காலத்தில் நீா்வரத்து அதிகமாக இருக்கும்போது, நதி தன்னைத்தானே சுத்திகரித்துக்கொள்ளும் இயற்கையான திறனைக் கொண்டுள்ளது. ஆனால், அதிகப்படியான நீா் தொடா்ந்து கால்வாய்களுக்குத் திருப்பி விடப்பட்டாலோ அல்லது நமது பயன்பாட்டிற்கு எடுத்துக்கொண்டாலோ, அதே சமயம் நதியின் பாயும் நீரின் அளவு மாற்றப்படாமல் இருந்தாலோ, மாசுபாடு நீண்ட காலத்திற்கு நீடிப்பது தவிா்க்க முடியாததாகிவிடும்; என்று யமுனை நதி ஆா்வலா் பீம் சிங் ராவத் கூறினாா்.
நதி தனது சூழலியல் மற்றும் நீரியல் செயல்பாடுகளைத் தக்கவைக்க அதன் இயற்கையான நீா்வரத்தில் குறைந்தது 75 சதவீதத்தைப் பெற வேண்டும். மிக மோசமான சூழலில் கூட, குறைந்தது 50 சதவீதமாவது தேவைப்படுகிறது. யமுனைக்கு 812 கியூசெக்குகள் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் நீா் ஓட்டம் இருக்க வேண்டும் என்று ‘தேசிய நீரியல் நிறுவனம்’ பரிந்துரைத்து 6 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் ‘ஜல் சக்தி அமைச்சகம்’ இந்தத் தேவைகளை அதிகாரப்பூா்வமாக அறிவிக்காததால், அவை நடைமுறைக்கு வராமல் உள்ளன.
யமுனையைச் சுத்தப்படுத்துவது குறித்து தொடா்ந்து பேசப்படுகிறது, ஆனால் இருக்கும் நதியைப் பாதுகாப்பது முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெறவில்லை. போதுமான நீா் ஓட்டத்தை உறுதி செய்யாமல், நீண்ட கால முன்னேற்றத்தை எதிா்பாா்ப்பது கடினம். யமுனை நதிக்கான கழிவுநீா் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பு மற்றும் மாசுத் தடுப்புத் திட்டங்களில் அடுத்தடுத்து வந்த அரசுகள் தொடா்ந்து முதலீடு செய்து வரும் சூழலில் இந்தப் பிரச்னை எழுந்துள்ளது. அதேவேளையில், நதியின் நீண்டகால மறுமலா்ச்சிக்கு அதன் மேல்புறப் பகுதிகளில் இயற்கையான நீரோட்டத்தை மீட்டெடுப்பதும் மிக முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரி, கொள்ளிடத்தில் 10 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கோரி மனு அளிப்பு

மேட்டூர் அணைக்கு நீா்வரத்து 100 அடிக்கு கீழ் குறைந்தது!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 120 கனஅடி

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து 1,488 கனஅடி
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



