கேரளத்தில் தனியார் ஹோட்டல் விடுதியில் உள்ள லிஃப்ட்டில் (மின்தூக்கி) காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சிக்கிக் கொண்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர் இன்று சென்றிருந்தார்.
அப்போது தனியார் ஹோட்டலில் உள்ள லிஃப்ட்டில் சென்றபோது பழுது காரணமாக லிஃப்ட் இடையிலேயே நின்றுவிட்டது.
தொடர்ந்து இரும்புக் கம்பிகள் கொண்டு அங்குள்ளவர்கள் லிஃப்ட்டைத் திறக்க முற்பட்டும் முடியவில்லை. பின்னர் தீயணைப்புத் துறையினர் வந்து ஹைட்ராலிக் ஸ்ப்ரெட்டர் கொண்டு லிஃப்ட் கதவைத் திறந்து சசி தரூரை பாதுகாப்பாக மீட்டனர். சுமார் அரை மணி நேரம் சசி தரூர் லிப்ட்டுக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
லிப்ட்டில் சசி தரூருடன் அவரது ஆதரவாளர்கள் சிலரும் இருந்துள்ளனர். அனைவரையும் பாதுகாப்பாக மீட்டதற்கு சசி தரூர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"லிஃப்ட்டில் அரை மணி நேரம் சிக்கியிருந்தது பெரிய பிரச்னையாக இல்லாவிட்டாலும் எனது அடுத்த இரண்டு சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு தாமதம் ஆனது. என்னைக் காண வந்திருந்த ஒரு அமைச்சரைச் சந்திப்பதற்கு தாமதமாகச் செல்ல நேரிட்டது.
இருப்பினும், நாங்கள் தொடர்புகொண்ட சில நிமிடங்களிலேயே மிகவும் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்ட கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் வேகம், செயல்திறன் திறமைக்கு எனது மனமார்ந்த நன்றியையும் மிகுந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Half an hour in the lift was not a major problem, though it did make me unconscionably late for my next two appointments, one with a Minister calling on me! But I would wish to add a huge thank-you, and my highest appreciation, for the speed, efficiency and capability of the⦠https://t.co/9e800hEGiv
— Shashi Tharoor (@ShashiTharoor) July 17, 2026
Summary
Congress MP Shashi Tharoor was stuck in a hotel lift in Kerala
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேலும் சிறக்க வேண்டும் அரசுப் பள்ளிகள்!

இயக்குநர், ஒளிப்பதிவாளர் செழியன் மறைவு: இயக்குநர் சசி அஞ்சலி!
மகளிர் இலவசப் பயணத்துக்கு எதிர்ப்பு... தனியார் பேருந்து நிறுவனங்கள் போராட்ட அறிவிப்பு!

உ.பி.: மால் லிஃப்ட்டில் சிக்கிக்கொண்ட 13 பேர்; பதற்றத்தில் இளம்பெண் மயக்கம்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |





