விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: பிரதமர் மோடி வாழ்த்து

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று ஏவப்படவுள்ள ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்டுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது பற்றி...

Rocket Vikram-1

‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட் - X | PM Modi

Published On :18 ஜூலை 2026, 9:04 am IST

இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக, தனியாா் நிறுவனம் தயாரித்து, புவியின் தாழ்வட்டப் பாதையை நோக்கி ஏவப்பட உள்ள ‘விக்ரம்-1’ ராக்கெட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து இன்று காலை 11.30 மணிக்கு ஏவப்படவுள்ள விக்ரம்-1’ ராக்கெட் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "இந்தியாவின் விண்வெளி பயணத்துக்கு ஒரு வரலாற்று எல்லை.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1, இன்று காலை 11.30 மணிக்கு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸிலிருந்து ஏவப்படுகிறது. இந்த நான்கு நிலைகள் கொண்ட ராக்கெட், விரைவான சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றின் மூலம் நம் இளைஞர்களின் திறமை, உறுதிப்பாடு, தொழில்முனை மனைப்பான்மையை எடுத்துக்காட்டுகிறது. மேலும், புதுமை மற்றும் நிறுவனங்களுக்கான புதிய வாய்ப்புகளுக்கான பாதையை நம் விண்வெளித் துறை அளிப்பதையும் காட்டுகிறது.

விக்ரம்-1 ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவுதலுக்காக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவுக்கு எனது வாழ்த்துகள். விக்ரம்-1 அதன் உயரத்தை அடைந்து, வரலாற்றை உருவாக்கி, ஆராச்சியாளர் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கட்டும்.

இந்த வரலாற்று முன்னெடுப்புக்கு அனைத்து இந்தியர்களும், குறிப்பாக இளம் நண்பர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

இதுவரை தனியாா் மூலம் உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகள் சோதனை அடிப்படையிலேயே சிறிது தொலைவு வரை செலுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், முதல்முறையாக ‘விக்ரம்-1’ ராக்கெட் புவியின் தாழ்வட்டப் பாதைக்கு அனுப்பப்பட்டு, விண்வெளி ஆய்வுக் கலன்களை நிலைநிறுத்த உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்துக்கு ‘ஆகமன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் மூலம் இந்தியாவின் ‘கிரஹா ஸ்பேஸ்’, ‘காஸ்மோசா்வ், டி-கியூப்ட்’ போன்ற நிறுவனங்களின் ஆய்வுக் கலன்களும், ஸ்கைரூட் நிறுவனத்தின் ஸ்கோப் ஆய்வுக் கலனும் 450 கிலோ மீட்டா் தொலைவு கொண்ட புவியின் தாழ்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளன.

Summary

'Historic New Frontier': PM Modi Hails Skyroot's Vikram-1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.