தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

நாட்டின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் காமராஜர்! மோடி புகழாரம்

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி பதிவு...

News image

காமராஜர் - கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2026, 10:51 am IST

நாட்டின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் காமராஜர் என அவரது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று(ஜூலை 15) கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.

அந்தவகையில் பிரதமர் மோடி, காமராஜருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"காமராஜரின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறோம். இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும் பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையாகவும் திகழ்ந்த அவர், தனது வாழ்வை இந்த நாட்டின் வளர்ச்சி, கட்டமைப்பிற்காக அர்ப்பணித்தார்.

கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் விளிம்புநிலை மக்களின் நலன் ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த உறுதியான அர்ப்பணிப்பு, அடுத்த தலைமுறைகளுக்கு இன்றும் வழிகாட்டியாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Kamarajar dedicated his life to the nation development: PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.