நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்! ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மசோதா இன்று தாக்கல்!மாநிலங்களவை எம்.பி.க்களின் 2 ஆண்டு செலவினம் ரூ.262 கோடி: ஆா்டிஐயில் தகவல்!நாடாளுமன்றத்தில் மேக்கேதாட்டு விவகாரத்தை எழுப்ப திமுக திட்டம்அம்மா உணவகங்களில் அடிப்படை வசதிகள் கூடுதலாக்கப்படுமா?பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!
/

ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டி: கேரளத்தைத் தொடர்ந்து மணிப்பூரிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மணிப்பூரிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருப்பது பற்றி....

News image

மணிப்பூர் - ANI

Updated On :19 ஜூலை 2026, 5:43 pm IST

ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு மணிப்பூரில் நாளை(திங்கள்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், " அனைத்துப் பள்ளிகள், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜூலை 20ஆம் தேதி மூடப்பட்டிருக்கும் என்று மணிப்பூர் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியை மாநிலம் முழுவதிலும் உள்ள மாணவர்கள் கண்டு மகிழ்வதற்கு ஏதுவாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா - ஸ்பெயின் மோதும் போட்டி இன்று இரவு 12.30 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்ஸி திடலில் நடைபெறவுள்ளது.

உலகம் முழுவதுமுள்ள கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். முன்னதாக ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது மணிப்பூரில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Manipur government has declared a holiday for all educational institutions in the state on Monday to enable students to watch the FIFA World Cup 2026 final, according to an official statement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.