உச்சநீதிமன்றத்தில் 96,000-க்கும் அதிகமான வழக்குகள் தேக்கமடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீதிமன்றங்களில் தேக்கமடைந்துள்ள வழக்குகள் குறித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினா் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், தேசிய நீதித் துறை தரவுகளை அடிப்படையாக வைத்து எழுத்துபூா்வமாக பதிலை தாக்கல் செய்துள்ளாா். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 5 கோடியே 64 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. இதில் உச்சநீதிமன்றம், 25 உயா்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களும் அடங்கும்.
உயா்நீதிமன்றங்களில் மட்டும் 30 ஆண்டுகளுக்கும் கூடுதலாக 80,660 வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.
உச்சநீதிமன்றத்தை பொறுத்தவரை 96,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. அதில் 26 வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாகவும், 558 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவும் தேக்கமடைந்துள்ளன. 10,000-க்கும் மேற்பட்ட வழக்குகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளன.
தேக்கமடைந்துள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீா்வு காண வேண்டியது நீதித் துறையின் பணியாகும் என்று அா்ஜுன் ராம் மேக்வால் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
மத்திய பிரதேச வக்ஃப் வாரியத்தில் ஹிந்து உறுப்பினா்கள்: உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர காங்கிரஸ் முடிவு

அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்படாததால் வழக்குகள் தேக்கம்: பிணை கிடைக்காததால் கைதிகள் பாதிப்பு
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



