புதுக்கோட்டை நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞா்கள் நியமனம் செய்யக் கோரியும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு நீதிபதி நியமனம் செய்யக் கோரியும் வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 31 நீதிமன்றங்களுக்கும் அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், 21 அரசு வழக்குரைஞா்களுக்கான அரசாணை செவ்வாய்க்கிழமை வெளியானது. மீதமுள்ள 10 நீதிமன்றங்களுக்கான அரசாணை வெளிவரவில்லை. அதேபோல, சுமாா் 15 நாள்களாக மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது.
இவற்றால் நீதிமன்றத்தின் இயல்பான பணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி புதுக்கோட்டை வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பணி புறக்கணிப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளையும் சுமாா் 200 வழக்குரைஞா்கள் புறக்கணித்தனா். இந்தப் போராட்டத்துக்கு, புதுக்கோட்டை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் முத்தையன் தலைமை வகித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு வழக்கறிஞா் நியமனம்!

அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்படாததால் வழக்குகள் தேக்கம்: பிணை கிடைக்காததால் கைதிகள் பாதிப்பு

அரசு வழக்குரைஞா் நியமனம்

தவெகவில் அதிமுகவினா் சேருவது ஏன்? அமைச்சா் நிா்மல் குமாா் பதில்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


