மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

அலற விட்ட விடியோ! காவல் வாகனத்தை தடுத்து நிறுத்திய பெண் யார்?

காவல் வாகனத்தை தடுத்து நிறுத்திய பெண் ரியா அஹிர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

மும்பை பெண் - from video

Updated On :23 ஜூலை 2026, 6:11 pm IST

மும்பையில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய இளைஞர்களை கைது செய்து அழைத்துச் சென்ற வாகனத்தைத் தடுத்து நிறுத்திய பெண் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீட் வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் நடந்து வரும் போராட்டத்தின் எதிரொலியாக, நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.

மும்பையில் கொட்டும் மழையில் மாணவர்களும் இளைஞர்களும் போராடிக் கொண்டிருந்தபோது, காவல்துறையினர் அங்கு வந்து, இளைஞர்களை காவல் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

இதனைப் பார்த்த பெண் ஒருவர், நடு சாலையில் நின்று, காவல் வாகனத்தைத் தடுத்து நிறுத்தினார். ஒரு அடிகூட காவல் வாகனம் நகராதவாறு தடுத்து நிறுத்தியத்தால் அதிலிருந்து இளைஞர்கள் இறங்கி வெளியே வந்தனர்.

இன்று சமூக வலைத்தளங்களில் டிரெண்டான இந்த விடியோவில் இடம்பெற்ற பெண் ரியா அஹிர் என்பதும், இவர் 27 வயது நிரம்பிய மாடல் துறையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து விடியோக்களைப் பதிவிட்டு ஏராளமான பின்தொடர்பவர்களையும் கொண்டிருக்கிறார்.

போராட்டக்காரர்களை வாகனத்தில் ஏற்றுவதைப் பார்த்ததும், அதனை நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக அங்குச் சென்று வாகனத்தின் முன் நின்றேன். போராட்டக்காரர்களை வேறு எங்கேனும் கொண்டு செல்வார்கள். அது கூடாது என்பதற்காக அவர்களை இறக்கிவிடுமாறு வலியுறுத்தினேன்.

வாகனத்தில் ஏற்றப்பட்ட இளைஞர்களின் குரல்தான் என்னை அவ்வாறு செய்ய வைத்தது. வாகனத்தில் இளைஞர்களை கொண்டு சென்று சற்று தூரத்தில் இறக்கிவிட்டுவிடுவோம் என்று காவல்துறை சொன்னபோதும், அதனை அவர் ஏற்கவில்லை. அவ்வாறு செய்யக் கூடாது என்று நான் கூறினேன்.

வெளியே தைரியமாக நின்றிருந்தாலும், உள்ளுக்குள் சற்று பயமாகவே இருந்தது. ஆனால், என்ன நான் செய்வது சரி என்று மட்டும் எனக்குத் தெரியும் என்றார்.

முதலில் வாகனத்தின் முன் நின்ற என்னை காவல்துறை பயமுறுத்திப் பார்த்தது. வாகனத்தை சற்று இயக்கிப் பார்த்தார்கள். ஆனால் எனக்கு அப்போது பயம் வரவில்லை. வாகனத்தை இன்னும் பலமாக நிறுத்த முயன்றேன் என்கிறார் மகிழ்ச்சியாக.

Summary

A video that caused a stir! Who is the woman who stopped the police vehicle?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.