2026 - முதல் ஆறு மாதம் தமிழ் சினிமாவுக்கு எப்படி இருந்தது?
இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் தமிழ் சினிமா நிலவரம்...

தாய் கிழவி, கருப்பு, யூத் திரைப்பட போஸ்டர்கள்
இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் தமிழ் சினிமாவின் வணிக நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை (ஜூலை) பார்த்தால், தமிழ் சினிமாவுக்கு முந்தைய ஆண்டைவிட கலவையான ஆண்டாகவே அமைந்திருக்கிறது. பெரிய நட்சத்திரப் படங்கள், நடுத்தர பட்ஜெட் படங்கள் மற்றும் சிறிய தயாரிப்புகள் என ஜூலை முதல் வாரம் வரை சுமார் 124 தமிழ்த் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு வாரமும் குறைந்தது 3 திரைப்படங்களாவது வெளியாகிவிடுவதால் திரையரங்கங்கள் கிடைப்பதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன. படம் நன்றாக இருந்தால் மட்டுமே வசூலில் வெற்றி பெற வாய்ப்பு என்பதால் இந்தாண்டு இதுவரை சில படங்களே வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றுள்ளன.
அந்த வகையில், நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்து முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டுமே ரூ. 170 கோடி வரை வசூலித்திருக்கிறதாம். இதுவே சூர்யாவின் மிகப்பெரிய வெற்றிப்படம்.
அடுத்தடுத்த இடங்களில் நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி ரூ. 100 கோடி, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கிய தாய் கிழவி ரூ. 90 கோடி, நடிகர் கென்னின் யூத் திரைப்படம் ரூ. 85 கோடி, ப்ரீத்தி முகுந்தன் ஆக்ஷன் கதையாக நடித்த பிளாஸ்ட் ரூ. 72 கோடி, நடிகர் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே ரூ. 66 கோடி, ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் ரூ.55 கோடி, அபிஷன் ஜீவிந்தின் வித் லவ் ரூ. 40 கோடி, பரிமளா அண்ட் கோ ரூ.10 கோடி, விஜய் ஆண்டனியின் நூறு சாமி ரூ. 9 கோடி ஆகியவை மட்டுமே வசூல் ரீதியாக கவனிக்கப்பட்ட படங்களாக மாறியுள்ளன. ஜூலை முதல் வாரத்தில் வெளியான கட்டா குஸ்தி - 2 ரூ. 22 கோடி (முதல் 3 நாள்கள் வசூல்) வரை வசூலித்துள்ளது. மேலும், வசூலித்து வெற்றிப்பட பட்டியலில் இணைய உள்ளது.
கடந்தாண்டின் முதல் பாதியை , 2026-ல் இதுவரை வெளியான படங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, வெற்றி விகிதம் குறைவாகவே உள்ளது. இருப்பினும், இந்த ஆண்டின் முதல் பாதியில் தமிழ் சினிமாவுக்கு சில குறிப்பிடத்தக்க ஹிட்களும் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டான 2025-ன் முதல்பாதியை ஒப்பிடும்போது பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ. 1400 கோடியிலிருந்து ரூ.1015 கோடியாக குறைந்துள்ளது. ஓடிடி வணிகத்திலும் கடந்தாண்டு 39.4% இருந்த வணிகம் இம்முறை 29.9% ஆக குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சாட்டிலைட், ஹிந்தி டப்பிங் உரிமம், இசை உரிமம் ஆகியவையும் கடந்தாண்டை ஒப்பிட குறைவான வணிகத்தையே செய்துள்ளன.
அடுத்ததாக, சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், கார்த்தியின் சர்தார் - 2, ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 ஆகிய பெரிய படங்களும் வெளியாகவுள்ளதால் ஆண்டின் இறுதிக்குள் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Information regarding the state of Tamil cinema during the first six months of this year has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






