அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

இதயம் முரளி என் வாழ்க்கையில் நெருக்கமான திரைப்படம்: ப்ரீத்தி முகுந்தன்

நடிகை ப்ரீத்தி முகுந்தன் இதயம் முரளி குறித்து பேசியுள்ளார்...

News image

நடிகை ப்ரீத்தி முகுந்தன்

Updated On :6 ஜூலை 2026, 4:04 pm IST

நடிகை ப்ரீத்தி முகுந்தன் இதயம் முரளி திரைப்படத்தில் தன் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த திரைப்படமான இதயம் முரளி திரைப்படம் வருகிற ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில், நாயகனாக நடிகர் அதர்வாவும் நாயகிகளாக ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர்.

கல்லூரி கால காதல், பள்ளியிலிருந்தே தொடரும் நட்பு என இன்றைய இளைஞர்களுக்கான கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் தமன் இசையமைத்த பாடல்களும் கவனம் பெற்றிருந்த நிலையில், அண்மையில் வெளியான டிரைலரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்தது.

இந்த நிலையில், இதயம் முரளி புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை ப்ரீத்தி முகுந்தன், “இதயம் முரளி திரைப்படத்தில் ஒப்பந்தமானபோது இவ்வளவு சிறப்பான படமாக வரும் என நினைக்கவில்லை. இது என் வாழ்க்கையின் மிக நெருக்கமான திரைப்படம். இந்தக் கதாபாத்திரத்தில் இரண்டு திருப்பங்கள் இருக்கின்றன. அது உங்களுக்கெல்லாம் பிடிக்கும். அதற்கு, இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நன்றி. இப்போது மேடையில் நிற்கும் போது என் இதயம் படபடவென அடிக்கிறது. நீங்கள் (ரசிகர்கள்) எனக்கு கொடுக்கும் ஆதரவுக்கு பெரிய நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Preethi Mukundhan has spoken about her character in the film Idhayam Murali

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.