ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நடிகை கயாடு லோஹர் நேஷனல் கிரஷ் ஆவார்: அட்லி

நடிகை கயாடு லோஹர் குறித்து இயக்குநர் அட்லி கருத்து...

actor kayadu lohar, director atlee

நடிகை கயாடு லோஹர், இயக்குநர் அட்லி

Published On :6 ஜூலை 2026, 3:06 pm IST

இயக்குநர் அட்லி நடிகை கயாடு லோஹர் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக கயாடு லோஹர் வளர்ந்து வருகிறார். டிராகன் திரைப்படத்தால் தொடர்ந்து இதயம் முரளி, டொவினோ தமாஸுடன் பள்ளிச்சட்டம்பி ஆகிய படங்களில் ஒப்பந்தமானார். இதில், பள்ளிச்சட்டம்பி பெரிய வெற்றியை பெறவில்லை. இதயம் முரளி விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி திரைப்படத்திலும் நடிகர் சூர்யாவின் 48-வது படத்திலும் கயாடு லோஹர் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், இதயம் முரளி புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் அட்லி பேசும்போது, “இதயம் முரளி திரைப்படம் மிக சுவாரஸ்யமான கதை. இக்கதையைக் கேட்ட போது நானே தயாரிக்கிறேன் என்றேன். ஆனால், ஆகாஷ் பாஸ்கரனே இயக்கி தயாரிப்பதாகச் சொன்னார். படம் முடிந்ததும் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்தான் இப்படம். இதில் வரும் ஃபஹத் ஃபாசில் கதாபாத்திரம் என்னை நினைவுபடுத்துகிறது.

நடிகர் அதர்வாவுக்கு நல்ல வெற்றிப்படமாக அமையும். ப்ரீத்தி முகுந்தன் அருமையாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். நடிகை கயாடு லோஹர் வேற லெவல். மிக விரைவிலேயே அவர் இந்தியாவின் கிரஷ் ஆக மாறுவார் என நினைக்கிறேன். இதயம் முரளி திரும்பத் திரும்ப பார்க்கக்கூடிய படமாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

Director Atlee has spoken about actress Kayadu Lohar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.